கத்திக் குத்துக்கு இலக்காகி கணவன் பலி - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கத்திக் குத்துக்கு இலக்காகி கணவன் பலி

மஹியங்கனை பிரதேசத்தில் மனைவியின் குத்து குத்துக்கு இலக்காகி ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.

மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்
.மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

.இவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் அவர் தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்க முயற்சித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது

.பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் நேற்றிரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்கிவிட்டு, பிள்ளைகளுக்கும் விஷம் கொடுக்க முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது மனைவி மன்னா கத்தியால் காலில் அடித்ததில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

.குறித்த நபர் முன்னொரு சந்தர்ப்பத்தில் தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சந்தேக நபரின் மனைவி பொலிஸில் சரணடைந்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

About ஈழ தீபம்