வீடுகள் தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வீடுகள் தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது!

 

பேலியகொட வணிக வளாகம் மற்றும் கொம்பனித் தெரு பகுதியில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு வீடுகளை வழங்குவதாகக் கூறி மக்களிடம்

பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், பல்வேறு நபர்களிடம் இருந்து 19,663,800 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாகின்ன, கஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது

About UPDATE