சட்டவிரோத மதுபானம் அருந்திய நபர் மரணம்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

சட்டவிரோத மதுபானம் அருந்திய நபர் மரணம்!

நண்பர் ஒருவருடன் சட்டவிரோத மதுபானம் அருந்திய நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்தொட்ட துத்திரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான இஷான் புஷ்பகுமார என்ற 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி பண்டாரகம, பத்தேகொட பிரதேசத்திற்கு அருகில் வீடொன்றை நிர்மாணித்து வரும் நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கொட்டகையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08) அதிகாலை அவரது மனைவியின் அழைப்புக்கு பதிலளிக்காததால், அவரைத் தேடுமாறு பக்கத்து வீட்டு இளைஞருக்கு மனைவி கூறியுள்ளார்.

பின்னர் வாடிக்கு குறித்த இளைஞன் சென்று தேடிய போது குறித்த நபரின் சடலம் கண்டுபிjடிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது சடலத்தின் அருகில் 500 மில்லி மீற்றர் சட்டவிரோத மதுபான போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருடன் மது அருந்தியதாக கூறப்படும் நண்பரிடம் வாக்குமூலம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.


பாணந்துறை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீதவான் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிய சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் இறந்தவர் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

About UPDATE