943 சந்தேக நபர்கள் கைது - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

943 சந்தேக நபர்கள் கைது

 நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையானயுக்தியநடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மேலும் 943 சந்தேக நபர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 670 சந்தேக நபர்களும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 273 பேரும் அடங்குவர்.

 

மேலதிக விசாரணைகளுக்காக 9 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களில் போதைக்கு

அடிமையான 25 பேர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.

 


மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் நிலையம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள்

பட்டியலில் இருந்த 32 சந்தேக நபர்களும் விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த 24 மணி நேரத்தில், 199 கிராம் ஹெரோயின், 168 கிராம் ஐஸ், 2 கிலோ கஞ்சா, 2,883 கஞ்சா செடிகள் மற்றும் 59 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

About UPDATE