யாழில் நடுரோட்டில் தாயும், மகளும் மதுபோதையில் இரவில் நடந்த சம்பவம்!!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

யாழில் நடுரோட்டில் தாயும், மகளும் மதுபோதையில் இரவில் நடந்த சம்பவம்!!!

 


யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மதுபோதையில் நடு வீதியில் விழுந்து கிடந்த தாயும், மகளும் மீட்கப்பட்டுள்ள 

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அண்மையில் உள்ள இராணுவ  முகாமிற்கு எதிராக இடம்பெற்றதாக  தெரிய வந்துள்ளது .

இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான  காணொளியும் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 53 வயது தாயும், 29 வயது மகளுமே மதுபோதையில் விழுந்துள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் இரண்டு பெண்கள் வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த பிரதேச இளைஞர்கள், அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து, உதவிக்கு விரைந்து சென்று, அவர்களிற்கு என்ன நடந்தது என விசாரித்த போதே, மதுபோதையில் விழுந்துள்ளனர் என அறிந்து கொண்டனர்

இதனையடுத்து பெண்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, தாம் அந்த பகுதியிலுள்ள வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவரின் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் மதுபானம் பருக தந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

 போதை உச்சத்தில் இருப்பதால் தம்மால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை, தம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு பெண்கள் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டனர் .

 அவர்களை இளைஞர்கள் காணொளி எடுக்க , மகள் அங்கிருந்து ஓடிச்சென்று, அருகிலுள்ள பற்றையொன்றுக்குள் மறைந்து இளைஞர்களுடன் வாய்த்தகராற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், போதையிலிருந்த மகள், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பியோட தாயார் மட்டும் சிக்கிக் கொண்டார்.இதனையடுத்து பொலிசார் தாயாரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளார் .


அதேவேளை யாழ்மாவட்டத்தில் போதைப்பொருளும் , சமூக சீரழிவுகள் தலைவிரித்தாடிவரும் நிலையில் , தாயும் மகளும் குடிபோதையில் ரோட்டில் வீழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


.மதுபோதையால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் நேரும் சாலை விபத்து இதற்குச் சான்று.

சிந்திக்கும் திறனை இழப்பதால், ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாது.
* பெரும்பாலான நேரத்தில் தேவையற்ற சிந்தனைகளால் தூண்டப்பட்டு, வாதங்கள், சண்டையில் ஈடுபடுவீர்கள்

About ஈழ தீபம்