இளமையான தோற்றம், பொலிவான முகம் தான் பெரும்பாலான பெண்களின் ஏக்கத்திற்கு காரணமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை இந்த புத்தாண்டில் தொடங்குவதற்கு தீர்மானம் எடுங்கள். சமீப காலங்களில் இளம்பெண்களிடையே கொரியன் சீரிஸ் பிரபலமாகி வருகிறது. கொரிய பெண்களின் முகத்தில் சின்ன பிசிறு கூட இல்லாமல் பளபளவென மின்னுவதை போலவே, தாங்களும் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நம் பாரம்பரிய முறைகளை பின்பற்றி ஒரே வாரத்தில் கொரிய பெண்களைப் போலவே பளபளப்பா முகத்தின் வெளிப்புறத் தோற்றத்திற்கு பேஸ் பேக் போட்டால் மட்டும் போதாது. நம் உடலுக்குள்ளும் சில ஊட்டச்சத்துகள் இருப்பது அவசியம். அதற்கு அன்னாசி, ஸ்ட்ராபெரி, கிவி, பப்பாளி போன்ற வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். பருவகால பழங்களை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய்யில் பொரித்த உணவுகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளியிருங்கள். ஆளி விதைகள், பூசணி விதைகள் வெந்தயம், சியா விதைகள் மென்று உண்பது நல்லது. உணவுகளுடன் போதிய தண்ணீரும் உடலுக்கும்
சருமத்திற்கும் நல்லது. இதை இரண்டாம் நாள் செய்ய வேண்டும். கொரியன் பெண்கள் தங்களுடைய சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவர்களின் அழகிற்கு முக்கிய காரணம். சருமத்தை பெற சில வழிமுறைகளை இங்கு காணலாம். ஆரோக்கியமான சருமம், உடல், மனம் எல்லாவற்றிற்கும் மையமாக நல்ல தூக்கம் உள்ளது. வெறும் பேஸ் பேக், உணவு முறை மட்டுமின்றி 7 மணி நேர தூக்கமும் தான் முகப் பொலிவை கொடுக்கும். ஏழாவது நாள் மட்டுமின்றி நாள்தோறும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
