வவுனியா - ஓமந்தை, சிதம்பரநகர் பகுதியில் உள்ள தோட்ட காணியில் இருந்து கைக்குண்டுகளை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர்.
குறித்த காணியை அதன் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.
இதன்போது நிலத்தில் புதைந்திருந்த இரு கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக ஓமந்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தபட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும், நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த கைக்குண்டுகள் நேற்றையதினம் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.