பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிதாக பெயர் மாற்றம். - Global Tamil Voice உலக தமிழ் குரல்

பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிதாக பெயர் மாற்றம்.

சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், Facebook, Instagram மற்றும் WhatsApp, ஆகிய செயலிகளின் பெயர்கள் மாற்றப்படவில்லை. 
 வருடாந்த கூட்டத்தின் போது புதிய பெயர் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக மெய்நிகர் ஒன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை பேஸ்புக் செலுத்தி வருவதாகவும் அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
 சமூக பிரச்சினைகளுடன் போராடி பல விடயங்களை கற்றுக் கொண்டதாகவும், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் உருவாகியுள்ளதாகவும் Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.



About UPDATE