வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் பலி.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் பலி..

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, மொனராகலை, பண்டாரகம மற்றும் பொல்பித்திகம ஆகிய பிரதேசங்களில் குறித்த விபத்துகள் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 திருகோணமலை – முருகாபுரி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் 53 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை – வெல்லவாய வீதியின் கச்சேரி சந்தியில் பஸ் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். பண்டாரகம பகுதியில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 இதேவேளை, பொல்பித்திகம – கலுகல்ல பாலத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் 34 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.



About UPDATE