வவுனியா ஏ9 வீதியில் விபத்து... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வவுனியா ஏ9 வீதியில் விபத்து...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. 
 வவுனியா நோக்கிச்சென்ற சொகுசு வாகனம், டிப்பர் வாகனம் மற்றும் பாரவூர்தி (லொறி) ஆகியன ஒன்றின்பின் ஒன்று பயணித்த வேளையில் திடீரென வவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு அருகில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பாரவூர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


About UPDATE