வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்து.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்து....

வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ பேருந்து பூனாவைக்கு அண்மித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

 விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ,மேலும் இருவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர். வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




About UPDATE