கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை (Sanitizer) அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளே தொற்று நீக்கி திரவத்தை அருந்தியதாக கூறப்படுகின்றது.
குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக நேற்று (13) வருகை தந்த ஈரான் தூதரக அதிகாரிகள், தொற்று நீக்கி திரவத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.