சமந்தா- நாக சைதன்யா தனிப்பாதையில் பயணிக்க முடிவு.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

சமந்தா- நாக சைதன்யா தனிப்பாதையில் பயணிக்க முடிவு..

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தமது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.
 சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும் சமீபத்திய சில நேர்காணல்களிலும் தெரிவித்து இருந்தார்கள். 
 இந்த நிலையில், இன்னும் சில நாள்களில் (அக்டோபர் 6) இருவருக்கும் நான்காவது திருமண நாள் வரவிருக்கும் நிலையில், தற்போது இருவருமே தத்தமது சமூக வலைத்தளங்களில் பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு கணவன், மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.



About UPDATE