புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக நேற்று (18) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.