வவுனியா நகரில் 03 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 04 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அக்குரணை, மஹவ, கெக்கிராவ பிரதேசங்களை சேர்ந்த 29, 30 மற்றும் 53 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) தெரிவித்துள்ளனர்.