நேற்று 94 கொரோனா மரணங்கள்.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நேற்று 94 கொரோனா மரணங்கள்....

COVID தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை நேற்று உறுதி செய்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 உயிரிழந்த 94 பேரில் 45 பெண்களும் அடங்குகின்றனர். 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 19 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 73 பேரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் 30 வயதிற்கு குறைந்தவர்களாவர். இன்று இதுவரையில் 1885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



About UPDATE