குளத்திலிருந்து இருவரின் சடலங்கள் மீட்பு.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

குளத்திலிருந்து இருவரின் சடலங்கள் மீட்பு....

வீரகெட்டிய – போகமுவ குளத்திலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 30 மற்றும் 35 வயதான இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 போகமுவ குளத்தில் மீன்பிடிக்க கடந்த 5ம் திகதி மாலை சென்றவர்கள் வீடு திரும்பாமை குறித்து உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



About UPDATE