இடியுடன் கூடிய மழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம்..... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம்.....

நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் இன்று (4) 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இடி, மின்னல் தாக்கங்களின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 இதனிடையே, பேருவளை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மீனவர்களும் கடற்சார் தொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



About UPDATE