2021/2022 பெரும்போகத்தின் போது சுமார் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கைக்கு சேதனப் பசளையின் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முக்கியமாக விவசாய மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், தரமான சேதனப் பசளைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளை வழிநடத்த அமைச்சு எதிர்பார்க்கிறது.
அத்துடன் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளின் அளவை அதிகரிக்கவும் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
