ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று கட்டுகஸ்தோட்டையில் தாழிறங்கியுள்ளது.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று கட்டுகஸ்தோட்டையில் தாழிறங்கியுள்ளது..

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை தாழிறங்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 இதனால், மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.



About UPDATE