யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 125 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மாதகல் தொடக்கம் பருத்தித்துறை வரையான கடற்பிராந்தியத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதன்போது, 417 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொண்டமனாறு மற்றும் குருநகர் பகுதிகளை சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சாவை கொண்டு சென்ற டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
