காற்றுடன் கூடிய அடை மழை, நீரேந்தும் பகுதிகளில் நீர்மாட்டம் உயர்வு........ - Global Tamil Voice உலக தமிழ் குரல்

காற்றுடன் கூடிய அடை மழை, நீரேந்தும் பகுதிகளில் நீர்மாட்டம் உயர்வு........

தொடர்ந்து மலையகத்தில் காற்றுடன் கூடிய அடை மழை காலநிலையால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மாட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் மஸ்கெலியா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையினால் இன்று காலை முதல் மூன்று வான்கவுகள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அதிக மழை பெய்யுமிடத்து ஏனைய வான்கதவுகளும் திறந்து விடப்படும் என மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 மேலும் மவுசாகலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால் லக்ஷபான, கெனியன் நீர்தேக்கங்களிலும் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால் கரையோர வாழ் குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





About UPDATE