ஜேர்மனியில் ஒரே இரவில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம்................. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

ஜேர்மனியில் ஒரே இரவில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம்.................

ஜேர்மனியில் பெய்துவரும் கடும்மழையை அடுத்து அங்கு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பலர் காணாமல் போயுள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 ஜேர்மனியில் ஒரே இரவில் பெய்த கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகர் முழுவதும் நீரில் மூழ்கியது.

 மேலும் ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு என்ற நகரமும் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 80 பேர் வரை காணாமல் போயுள்ளனர். காணாமல்போனோரைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.



About UPDATE