இதனையடுத்து கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28 ஆம் திகதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அனைத்து விதமான பயணங்களுக்கும் திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை தொடர்பான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவசரமற்ற விடயங்களுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு வரை 15 சதவீதமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவது, வங்கதேசத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தலாம் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த முழு ஊரடங்கு அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
