பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது............. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது.............

பலாங்கொடை – கெப்போக் தோட்டத்தில் தனது பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

 கைது செய்யப்பட்டுள்ள நபரை பலாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய் வௌிநாட்டில் தொழில்புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் 8 வயதான சிறுவனும் 7 வயதான சிறுமியும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்நிலையில், குறித்த இரண்டு பிள்ளைகளையும் தினமும் தந்தை துன்புறுத்தி வந்துள்ளார். அயலவர்களால் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, அவர் நேற்று முன்தினம் (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சிறார்கள் இருவரும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



About UPDATE