இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 6 பேர் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக, மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட சிறு வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்புடனும் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
