வெளிநாட்டு பெண் ஒருவரை நாட்டிற்கு அழைத்துவந்து பாலியல் நடவடிக்கை : ஒருவர் கைது - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வெளிநாட்டு பெண் ஒருவரை நாட்டிற்கு அழைத்துவந்து பாலியல் நடவடிக்கை : ஒருவர் கைது

உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை நாட்டிற்கு அழைத்துவந்து பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் வௌ்ளவத்தையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌ்ளவத்தை பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பினூடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் பெற்றுத்தருவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, பின்னர் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 உஸ்பெகிஸ்தான் பெண் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் மனைவியான உஸ்பெகிஸ்தான் பெண் இவ்வாறான குற்ற செயல் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.



About UPDATE