பிலிப்பைன்ஸ் விமானமொன்று விபத்து... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

பிலிப்பைன்ஸ் விமானமொன்று விபத்து...

பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

 85 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது. தீப்பற்றிய விமானத்திலிருந்து 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



About UPDATE