மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென்மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சிலஇடங்களில் 75மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



About UPDATE