பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மந்திரா பேடி.
இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மந்திரா பேடியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான ராஜ் கவுசல் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
தயாரிப்பாளர் ராஜ் கவுசல், இன்று காலை தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இவரின் மறைவிற்கு திரையுலகிலுள்ள முன்னணி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
