இந்த வீட்டிற்கு முதலில் நுழைந்த பெண்கள் சிலர் அங்கிருந்த 3 பெண்களை தாக்கியுள்ளனர். பின்னர் ஆண்கள் சிலர் மதில் மீது ஏறி வீட்டிற்குள் நுழைந்துள்ளதனை அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீடீவி கமராவில் பதிவாகியுள்ளது.
தாக்குதல் நடத்திய தரப்பின் பெண் ஒருவருக்கும் தாக்கப்பட்ட தரப்பின் இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்த நிலையில் அந்த தொடர்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த இளைஞன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கிருந்து பெண்ணின் புகைப்படங்கள் சிலவற்றை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனால் பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் இளைஞனின் உறவினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
