தற்கால பாடத்திட்டங்களை புதிப்பிக்க கலந்துரையாடல் ..... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

தற்கால பாடத்திட்டங்களை புதிப்பிக்க கலந்துரையாடல் .....


தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்களை புதிப்பித்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக எதிர்வரும் காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் பிரதான பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Thentral News Network