வேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் - சுரங்கி ஆரியவன்ச - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் - சுரங்கி ஆரியவன்ச



கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்களின் வேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென  தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சுரங்கி ஆரியவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத்தேர்தலின் தற்போதைய அமைதியான காலகட்டத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறி சில கட்சிகளின் அபேட்சகர்கள் செயற்படுவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மேலும் மதவிழாக்களை ஏற்பாடு செய்வதாக கூறி சிலர் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றனர். இவைகள் தேர்தல் சட்டங்களுக்கு முரணான செயற்பாடாகும்.

ஆகவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்களின் வேட்பாளர்கள் மற்றும் ஆதாரவாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை மதித்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..


About Thentral News Network