இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம், இறுதிக் கிரிகைகளுக்காக அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு விடத்தல் தீவு பகுதியிலுள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது பள்ள மடு சந்தியூடாக சடலம் கொண்டு செல்லப்பட்டபோது பட்டாசு கொழுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பள்ள மடு சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 7பேர் மீது இராணுத்தினர் இவ்வாறு துப்பாக்கியினால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன்போது 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த நிலையில் பள்ளமடு வைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
