36 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

36 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு....


நேற்று மாலை பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்ட பகுதியில் டிக்கோயா மனிக்கவத்த இரண்டாம் பிரிவை சேர்ந்த 36 வயதுடைய செல்வராஜ் கிருஸ்ண மூர்த்தி என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் தனது மனைவியின் வீட்டுக்கு வந்திருந்ததாகவும் நேற்று மாலை முகம் கழுவ சென்ற வேலை வழிக்கி விழுந்துள்ளதாக இளைஞனின் மனைவி தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவறி விழுந்ததாக கூறப்படும் இளைஞனை டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இளைஞனின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...

About Thentral News Network