பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறு குற்றங்களை இழைத்த 902 பேருக்கு, ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையில், கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவினாலேயே பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம், அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
