வவுனியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜரான ரிஷாட் பதியுதீன் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வவுனியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜரான ரிஷாட் பதியுதீன்


விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.. அவரை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிஷாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆயாராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்றையதினம் காலை 10 மணிக்கு ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

About Thentral News Network