இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று....
நாட்டில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என்றும் 5 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
