நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் குறித்து சுகாதார துறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அதேநேரம் பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுவதற்கு வசதிகளை செய்தல், இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
