அரசியல் தலைமை என்பது மக்களை வழிநடத்துவதாக இருக்க
வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால்
இழுபட்டு செல்வதாக இருக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
மன்னார்
மாவட்டத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்ற மக்கள்
மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த காலத்தில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யவில்லை இதனாலே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீரா பிரசைனையாக உள்ளது
வர
இருக்கும் சந்தர்பத்தில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் மக்கள்
எதிர் கொள்ளும் சகல பிரச்சினைகளையும் குறிப்பாக அரசியல் உரிமை பிரச்சினை
அபிவிருத்தி அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வை நாம் கண்டு கொள்ளலாம்
கடந்த
காலங்களில் மன்னார் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நாங்கள் சேவை
செய்துள்ளோம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கின்றோம் ஆனாலும் நாடாளு
மன்றத்தில் என் கட்சி சார்பாக நான் ஒருவனே இருக்கின்றேன் அமைச்சராக
இருந்தாலும் என் அதிகாரத்துக்கு உட்பட்டே என்னால் செயல்பட முடியும் இதன்
காரணமாகவே திடமான அரசியல் கொள்கை, அதனை அடைவதற்கு தேவையான வழிமுறை பற்றிய
தெளிவு, மனவுறுதி போன்றவை இருந்த போதிலும் மக்கள் ஆதரவு போதியளவு இதுவரை
கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவே இலக்கினை இதுவரை அடைய முடியாமல் இருப்பதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
தனித்துவமாக
எமது பகுதியில் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் ஆட்சியில் வர
கூடியவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்து எங்கள் மக்களின் பிரச்சினைகளை
தீர்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.