இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு
நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச
சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஜீன்
மாதம்; 08 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்
பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள
முகமாலை மற்றும் ஆனையிறவிலும் வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
இதன்படி பதினொரு இலட்சத்து ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்கு
சதுரமீற்றர் பரப்பளவில் (1,101,954) இருந்து இருபத்திரண்டாயிரத்து
இருநூற்று அறுபது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
தொடர்ந்து இந்
நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியில்
துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது என்றார்.
(ஸார்ப் நிறுவனம் தகவல்)
