முழு உடல் அழகு
பெற பல செயற்கை முறைகளை பயன்படுத்தி உள்ளோம் ஆனால் அது நமக்கு முழுமையான பலனை தந்ததில்லை.
அதற்கு பதிலாக
பல பிரச்சினைகள் வந்து நம் அழகை கெடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இயற்கை
முறையில் முழு உடல் பெற பல அழகு குறிப்புகள் உள்ளது. அவற்றை பின் பற்றி வந்தாலே போதும்
உடல் முழுவதும் நம் அழகை அதிகரிக்க முடியும்.
சரி வாங்க உடல் அழகு பெற என்னென்ன அழகு குறிப்புக்கள் உள்ளது என்று
இப்போது பார்ப்போம்....
நகங்களை பராமரிக்க.............
தினமும் பாலுடன்
கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு நகம் உடைத்தல் குறையும்.மேலும்
நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.
முகம் அழகிற்கு...............
முகம் அழகு
பெற தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த
நீரால் கழுவ முகம் பொலிவுடனும் பளப்பளப்பாகவும் இருக்கும்.
முழு உடல் அழகு
பெற முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருக்கம் மறையும்.
இரவில் படுக்க
போகும் முன் தேன் குங்குமப்பூ மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும்.மேலும்
முழு உடல் அழகு பெறும்.
கழுத்தை பராமரிப்பதற்கு...........
கழுத்தை பராமரிக்க
சிறிதளவு ரோஸ் வாட்டர் சிறிதளவு வெங்காயச்சாறு இரண்டு சொட்டு ஆலிவு ஆயில் மற்றும் பயத்த
மாவு ஆகியவற்றை கலந்து கழுத்தில் தடவி ஒரு பத்து நிமிடம் கழுத்திலிருந்து தாடையை நோக்கி
லேசாக மசாஜ் செய்துவிடுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து
செய்ய நாளடைவில் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் கறுப்பு நிறம் மாறி பளப்பளப்பாக
காணப்படும்.
சருமத்தை பாதுகாக்க.....................
முகம் அழகு
பெற ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன் முட்டைகோஸின் இலையின் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள்.அதில்
ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலில்
நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.முன்பு இருந்ததை வடை சருமத்தில் நிறம் சவைப்பாக
காட்சியளிக்கும்.
உடல் அழகு பெற
தினமும் அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி துாளாக்கி தினமும் 5 கிராம் காலை
உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.
கண்களின் கருவளையம்
நீங்க..............
கண்களில் இருக்கும்
கருவளையம் நீங்க சிறந்த வழி. வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர்
சேர்த்து பசைபோல் ஆக்கவும்.இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில்
கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும்.
கருப்பு திட்டுக்களை
நீக்க..............
முகம் அழகு
பெற TIPS சிலருக்கு முகத்தில் மூக்கில் கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுக்கள்
காணப்படும்.இதை கிராம புறத்தில்“மங்கு“ என குறிப்பிடுவார்கள்.
இவற்றை போக்க
ஜாதிக்காய் சந்தனம் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த பற்றை
முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுக்கள் இருக்கும் இடத்தில் பசைபோல தடவுங்கள்.சில
முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)
மறைந்து விடும்.
இந்த டிப்ஸ்ஸை
தினமும் செய்து வர முழு உடல் அழகு பெறும்.





