வீட்டிலேயே உரம் தாயாரித்தல்....
வீட்டில்
சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு,குப்பைத் தொட்டியில்
போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில்
கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக் கூடிய குப்பையும் பிளாஸ்டிக்
பையில் கிடந்து அழுகி, அந்தப் பகுதியே நாற்றம் எடுப்பதுதான் மிச்சம். வீட்டில் சேரும்
மக்கக்கூடிய கழிவுகளை ஏன் உரமாக்கக்கூடாது?
பலரும் வீட்டில் தோட்டம் வைத்திருப்பார்கள்,
தொட்டச் செடிகளை ஆர்வமாக வளர்ப்பார்கள். தாவரங்கள் ஆரோக்கியமாக
வளர ஊட்டம் அவசியம். இதற்கான உரத்தைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
செய்முறை
·
7மண்
தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
·
இதில்
ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட ஒரு தொட்டியில் குப்பைகளை இட்டு வரவும். அசைவக் கழிவுகள்
அதிகம் வேண்டாம்.
·
கழிவு
மிகவும் ஈரமாக நொசநொசத்து இருந்தால் கொஞ்சம் மண்ணைப் போட வேண்டும்.
·
இந்தப்
பூந்தொட்டிகள் நிறைவதற்கு 3-4 மாதங்கள் ஆகும்.
·
பூந்தொட்டிகள்
நிறைந்த பிறகு 20-30 நாட்கள்,அப்படியே விடவும். அவ்வேளை காற்று போவதற்கு கிளறி விடவும்.
·
இந்தத்
தொட்டிகளில் காய்கறிச் செடிகள்,பூச்செடிகள் உங்கள் விருப்பத்தின் படி இட்டு வளர்க்கலாம்.
·
அப்படிச்
செடிகளை வைத்துவிட்டால், புதிய தொட்டிகளில் கிழமைக்கு கிழமை குப்பைகளை இட்டு வாருங்கள்.
·
இல்லையென்றால்,
பழைய தொட்டிகளில் உள்ள உரத்தைத் தோட்டத்தில் மீண்டும் புதிய கழிவைப் போடத் தொடங்குங்கள்.
வீட்டுக் கழிவுகளிலிருந்து தொட்டங்களுக்கு உரம்!
·
கிராப்புறங்களில்
மட்டுமன்றி நகரங்களின் மாடியிலும், வீட்டின் பின்புறத்திலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.
·
இயற்கை
உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளின் தோல் கழிவுகள்
போன்றவற்றையே சிறந்த உரமாக பன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த
முடியாத தக்காளிக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில்
கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் பின்புறம் குழி தோண்டி,அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது
மண்ணைத் தோண்டினால் உரக்குழி தயார்.
·
வசிப்போர்
உடைந்த மண் இதேபோல,பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடு சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.
மலைப்பிரதேசத்தில் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த உரம் தயாரிக்கலாம்.
·
இக்
கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொருள்களில் உள்ள
சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாக தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படும்போது
அவை நன்றக வளரும் இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
·
பூங்கா
கழிவுகள்: மக்கும் இலைகள்,பெரிய பூங்கா, தோட்டங்களில்
உதிர்ந்த இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவிக்க வேண்டும்.
அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க
இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் நிர்ணயிக்கும்
காரணிகள்.
·
எனவே,
கரிசமத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த
கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சத்துக் காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல்,
காய்ந்த இலைகள், புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் செய்ய
முடியும்.
·
ஆக்சிஜன்
அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக
இருக்கும் நுண்ணுயிர்கள் செயற்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்று ஏற்படுத்த
பூமியில் உள்ள குழியில் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்து நிலையில் குழாய்களைப்
பொருத்தலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை குழியில் உள்ள கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள
கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகளுக்கு செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும்
நுண்ணுயிர்களின் செயற்பாடுகள் துரிதப்படுகிறது.
·
ஈரப்பதன்
தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம்
குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர் எண்ணிக்கையும்
குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.
·
இத்
தொழில்நுட்ப முறைகளில் 30 நாட்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்பட்டு முதிர்வடையும்
நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானதாக குறைந்தும்,கருப்பு நிறமாகவும் , துகள்களின்
அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து,
மறுநாள் சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக்கொள்ளலாம்.
·
செறிவூட்டப்பட்ட
உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் உள்ள தரையில் குவித்து நூண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோபேக்டர்,
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.002 சதவீதம், ராக்பாஸ்பேட் ஆகியவற்றை 1டன் மக்கிய
உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்குமாறு நாட்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கப்படும்.
·
இவ்வாறு
தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும். இது சாதாரண உரத்தை விட ஊட்டச்சத்து
அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர் அதிகமாகவும் , தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும்
உதவும். வீட்டில் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு உரம்
தயாரிக்கலாம்.
·
அதாவது
இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு
மட்டுமல்லாது வயல்களில் பயிரிடும் அனைத்து வகைப் பயிர்களும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

