நாளை முதல் மீண்டும் மழை.! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

நாளை முதல் மீண்டும் மழை.!

Image result for மழைநாளை முதல் நாடுபூராகவும் மீண்டும் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
 இதனுடன் நாட்டின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் காலைவேளைகளில் மழைபெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் நண்பகல் மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடுவதுடன், மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

About Unknown