குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Image result for குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஹோலி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தற்போது இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வட இந்தியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இருப்பது ஹோலி பண்டிகை. பிரச்சனைகள் நீங்கி வாழ்க்கை வண்ணமயமாக மாற வேண்டும் என்பதற்காக, மக்கள் அனைவரும் மற்றவர்கள் மீது வண்ணப்பொடியை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்
 இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்தப் படங்களை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியை இரட்டிக்கும் விதமாக, ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரித்துள்ள ‘காலா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

About Unknown