மது போதையில் மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

மது போதையில் மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்

இந்தியாவின்  கேரளா மாநிலத்தில் 90 வயது மதிக்கதக்க மாமியாரை 50 வயது மருமகன் போதையில் பலாத்காரம் செய்ய துணிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மெப்பயூர் பகுதியில் திருமணம் ஆன தனது மகளின் வீட்டுக்கு அருகில் வீடு எடுத்து குடியிருந்துள்ளார் 90 வயது மூதாட்டி. 
சம்பவ நாளன்று முதாட்டியின் மகள் வெளியே சென்ற நிலையில் மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது போதை தலைக்கேரிய நிலையில் வீடு வந்த மருமகன் மாமியாரை கட்டாயபடுத்தி பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாக்கியுள்ளார். 
அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

About Unknown