சிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

சிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும்  அணிதிரண்டு கலந்துகொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதப்படுகொலையை உடன் நிறுத்தக்கோரி ஐ.நா.வைக் கேட்கும் முகமாக, 2018.03.03 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் இக் கவனயீர்ப்புப் போராட்டமானது முள்ளிவாய்க்கால் பிரதான சந்திக்கு அருகில் நடைபெறவுள்ளதால் அனைவரையும் இந்த மனிதாபிமானம் மிக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Unknown