பங்களாதேஷ் அணி வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

பங்களாதேஷ் அணி வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு

Related imageஇலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் ​தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் அணி வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியில் புதிய வீரர்கள் ஐவர் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன், அணியில் 7 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபு ஜாயட் , அரிஃபுல் ஹேக் , மஹெடி ஹசன் , சாஷிர் ஹசன்  மற்றும் அஃபிப் ஹொசைன்  ஆகியோர் புதிதாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
உபாதைக்குள்ளாகியிருந்த நிலையில், தென்னாபிரிக்காவிற்கு எதிரான இருபதுக்கு 20 தொடரைத் தவறவிட்டிருந்த தமிம் இக்பால்  மற்றும் முஸ்டாபிசர் ரஹ்மான்  ஆகியோர் இந்தப் போட்டியில் விளையாடுகின்றனர்.
இம்ருல் கயிஸ் , லிட்டன் டாஸ் , மெஹிடி ஹசன் , ஷபியுல் இஸ்லாம் ,மொமினுல் ஹேக் , நாசர் ஹூசைன்  மற்றும் டஸ்கின் அஹமட்  ஆகியோர் இந்த தொடரில் விளையாடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Unknown