துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி படுகாயம் : தலங்கமவில் சம்பவம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி படுகாயம் : தலங்கமவில் சம்பவம்

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கணவன், மனைவி ஆகியோர் நித்திரையில் இருக்கும் போது, வீட்டுக் கதவினை உடைத்து வீட்டினுல் நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About Unknown