இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் மஹிந்த தரப்பின் ஆதரவைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.   
எனினும் இவ்வாறு தனித்து ஆட்சி அமைக்கும்  முயற்சி வெற்றிபெறாமல் தேசிய அரசாங்கமே தொடருமாயின்  முக்கிய அமைச்சுக்களை  சுதந்திரக்கட்சியின் பக்கம்  எடுத்துக்கொள்வது  தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவதானம் செலுத்தியிருக்கின்றார். 
விசேடமாக நிதி அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு,  சர்வதேச வர்த்தக மூலோபாய அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு ஆகியவற்றை  சுதந்திரக்கட்சியின் பக்கம் எடுக்கும்நோக்கில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியிருக்கின்றார். 
பொருளாதாரம் மற்றும் நாட்டின்   அமைதி தொடர்பிலான  பொறுப்புக்களை கொண்டுள்ள இந்த அமைச்சுக்களை தம்வசம் எடுப்பதற்கே சுதந்திரக்கட்சி முயற்சிக்கின்றது. 
சுதந்திரக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சிகள் ஒருபக்கம் இடம்பெறும் சூழலில் மறுபக்கம் தேசிய அரசாங்கத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.  இந்த நிலையிலேயே  முக்கியமான அமைச்சுக்களை ஐக்கிய தேசியக்கட்சியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கில்  ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன அவதானம் செலுத் தியிருக்கின்றார்.
 
 
 
 
 
 
 
.jpg) 
 
